Thursday, June 12, 2014

அன்பென்னும் மழையிலே... திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் ச.மகாதேவன்



            அம்மையாரிடமிருந்து வந்த கடிதத்தைக் காட்டுகிறேன். 

அன்பாய் வரவேற்ற அந்த உதவியாளர்.  வரவேற்பறையில் அமரச் சொல்கிறார்.   எதிரே பார்க்கிறேன்

            கம்பீரச் சிங்கமாய் திரு. ரஜினி அவர்களின் ஆளுயரப்படம்.  அவரது மனதைப் போன்று அகன்ற அறை. ரம்மியமான ஒளி பரவுகிறது. 

  எங்கிருந்தோ ஓம்கார ஒலி செவியைத் தாலாட்டுகிறது.  நடுநாயகமாய்
ஸ்ரீ.
கிருஷ்ணரின் மூன்றடி உயர அற்புதச் சிலை ஆனந்தமயமாக அமைந்திருக்கிறது. மனித மனங்கள் அமைதியாக இருந்தால் வரவேற்பறைகூடத் தியான அறையாய் காட்சியளிக்க முடியும்.  அழகாய் காட்சியளித்தது

            மேகத்தை விலக்கிக் கொண்டு தண்மதி வெளிவருமே! அப்படி வந்தார் திருமதி. லதா ரஜினிகாந்த். என்னையும் அறியாமல் எழுந்து நின்று கை கூப்புகிறேன்
.
            'நன்றாக இருக்கிறீர்களா மகாதேவன்?' அவர்களின் தேன்குரல் மவுனத்தைக் கலைக்கிறது.  ‘ஆமாம்... நன்றாக இருக்கிறேன்' சொன்னபடி எழுந்தவன், அவர்களுக்குப் பரிசாகக் கொண்டு சென்ற 'பகவான்
 ஸ்ரீ ரமணமகிரிஷியின வாழ்க்கை வரலாற்றுக் கவிதை நூலைப் பரிசாகத் தருகிறேன்

            புன்னகைத்தபடி வாங்கிக்கொண்டு அமரச் சொல்கிறார் 

. தொலைபேசியில் அழைத்து தேநீர்வரவழைத்துத் தந்து உபசரிக்கிறார்

            'மகாதேவன்', ஆனந்த விகடனில் நான் எழுதியிருந்தது எப்படி இருந்தது? என்று கேட்டபடி, எந்தக்கவுரவமும் பார்க்காமல், அறை ஓரத்திலிருந்த மோடி நகலியில்' மாலை நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலைப் படியெடுத்துக் கொண்டிருந்தார்

            'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' சாதாரண பொழுதுபோக்குத் தொடராக விகடனில் வரவில்லையம்மா!  அது மக்கள் மத்தியியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை அறிவீர்களா?' என்றேன் 
.
            'அப்படியா?' என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? என்று கேட்கும்போதே அழகாய் ஒரு புன்னகை பூத்தார் திருமதி. லதா ரஜினிகாந்த்.

            'உங்கள் எழுத்தை ஆனந்த விகடனில் வாசித்தபின் பல பெற்றோர் தம் குழந்தைகளை அடிப்பதை நிறுத்திக் கொண்டார்கள் 
!
            குழந்தைகளோடு நட்பு பாராட்டக் கற்றுக் கொண்டார்கள்

            பாடத்தைச் சுமையாகச் சுமத்தாமல் விளையாட்டாகக் கற்றுத்தர முயன்றார்கள்' என்றேன். “ஆஷ்ரம் பள்ளிக்கும் நிறையக் கடிதங்கள் வந்திருக்கின்றன” என்றார்கள் திருமதி. லதா ரஜினி அவர்கள் 
.
            'நான் முன்வைக்கிற கல்விமுறை சாத்தியம்தானே! ஒர் ஆய்வு மாணவராக என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார் 
.
            “அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் நம்மால் மெக்காலேவின் கல்வி முறையிலிருந்து மாற முடியவில்லை

            பதினெட்டு  வருடங்கள் ஆய்வுப்படிப்பு வரை பயின்ற பின்னும் கூட, அரசாங்கத்திடம் வேலை கேட்டு மனு போடக் கூடிய நிலையில்தான் இன்னும் உள்ளோம். பாடத்திட்டத்தை நிறைய மாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியர் சார்ந்த பாடத்திட்டம் மாணவர் சார்ந்த பாடத்திட்ட முறையாக மாற வேண்டும்.”  என்றேன்

இவ்வளவு சிந்திக்கும் நீங்கள் ஏன் ஒரு வேறுபட்ட கல்லூரியைத் தொடங்கக் கூடாது?' என்று 23 வயதேயான ஓர் இளைஞனான என்னிடம் திருமதி. லதா ரஜினிகாந்த் கேட்டார்.  சட்டென்று என்னால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை 
.
'உங்கள் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும்' என்று அழகான கையெழுத்தால் திருமதி லதா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்கள
 



.
கேட்கத் தயக்கமாக இருந்தது. 'திரு. ரஜினிகாந்த் அவர்களைப் பார்க்காமலேயே கிளம்புகிறோமோ!' என்று மனம் படபடத்தது. முகக்குறிப்பில் புரிந்து கொண்டராய்’  மாலை நடைபெறும் 'தி-ஆஷ்ரம்' பள்ளி ஆண்டு விழாவில் அவர்தான் நூலை வெளியிடுகிறார். 'அப்போது அறிமுகப்படுத்துகிறேன்'  என்றார்.  சொன்னவாறே செய்தார்.
28.02.1998 சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு : தி ஆஷரம் பள்ளி ஆண்டு விழா
                எளிமையைப் பற்றிப் போதிப்பது எளிமையானது, கடைப்பிடிப்பது கடினமானது. எவனொருவன் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்கிறானோ அவனையே வரலாறு வரவு வைத்துக்கொள்கிறது.  மற்றவர்களைப் புறந்தள்ளி விடுகிறது.
                திரு. ரஜினிகாந்த் அவர்களும், திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களும் பொதுவாழ்வில் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் என்பதை பிப்ரவரி 28 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் எழுதிய 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவே சாட்சி.
            பளிச்சென்ற, வெள்ளை வெளேர் உடையில் 'தி ஆஷ்ரம்; பள்ளிக்குழந்தைகள் வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.  அதில் திரு. ரஜினி தம்பதியினரின் இரு மகள்களும் ஓடியாடி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
            திரு. ரஜினியின் ஞானகுரு பூஜ்யஜீ சுவாமி தயானந்த சரஸ்வதிதான் அந்நூலை வெளியிட வந்தவர்கள்.  மோடி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. பி. கே. மோடி அதன் முதல் பிரதியைப் பெற வந்திருந்தார்.
            'ஆஷ்ரம்' பள்ளிக்குழந்தைகளிடம் திடீரென ஒரு பரபரப்பு காரணம்... எல்லோர் இதயங்களையும் அன்பால், உயரிய பண்பால், தன்பால் ஈர்த்த தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் தும்பைப்பூ போன்ற வெள்ளை உடையில் பழைய அம்பாசிடர் காரில் வந்திறங்கினார்.
            கூர்மையான கனிவுப் பார்வையால் அனைவரையும் அன்பால் நோக்கியபடி திரு. ரஜினிகாந்த் மின்னலென மேடை ஏறுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதியைக் காலைத் தொட்டு வணங்குகிறார்.  ஆசி பெறுகிறார்.  இரு கைகளைக் கட்டியபடி அமர்ந்தவர்.  ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் ஊன்றி ஆழ்ந்த சிந்தனைக்குள் ஆழ்கிறார்.

            திருமதி. லதா ரஜினிகாந்த் என்னை மேடைக்கு அழைத்துச் செல்கிறார்.   திரு.  ரஜினிகாந்த் அவர்களிடம் இப்படி அறிமுகப்படுத்துகிறார் 
.
            “மகாதேவன் பாளை சேவியர் கல்லூரியில் இளம் அறிவியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே எழுத்துத் துறையில் பாரதப் பிரதமரிடம் சத்பவனா தேசிய விருது பெற்றவர்.  


 எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்றவர்.  பாலம் கலியாணசுந்தரம் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி உள்ளார். என்று திருமதி லதா ரஜினிகாந்த் சொல்லச் சொல்ல ரஜினிகாந்த் என்னைக் கூர்மையாகப் பார்க்கிறார்.
            “இவர்தான் சி” அவர்கள் சின்னஞ் சிறு மனிதர்கள்' தொடரை விமர்சனம் செய்து 76 பக்க விமர்சனக் கட்டுரை எழுதியவர்.  அவரைப் பெருமைப்படுத்தவே இந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராய் வரவேற்றுள்ளேன். என்று 'திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் சொல்ல, ரஜினி பட்டென்று கையை நீட்டி கைகுலுக்கினார்

            'சீக்கிரமே ஆசிரியராவீங்க...' என்று ஆசி தந்தார்.  மேடையில் நாங்கள் மூவரும் நின்றிருக்க சுவாமி தயானந்த சரஸ்வதி நடப்பவற்றை அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்

            சட்டென்று ரஜினிகாந்த் என் தோள்களைப்பற்றித் தன்னோடு வலப்புறத்தில் நிறுத்திக் கொண்டார்.  அந்தக் கணம் அருமையானது. அன்புமயமானது 
.
            மாணவனாக இருக்கிறேன்.  படிப்பு முடியவே இன்னும் நான்கு மாதங்களிருக்கிறது. யார் நமக்கு ஆசிரியப் பணி தரப் போகிறார்கள்?  ஏதோதோ நினைவுகள்... ரஜினிக்குப் பக்கத்தில் நிற்கும்போது மனதில் ஊடாடின.
                'எல்லோரையும் ஊக்கப்படுத்துபவர் தானே ரஜினிகாந்த். ஊக்கப்படுத்த அவ்வாறு கூறியிருப்பார்' என்று நினைத்தபடி பக்கத்தில் நின்றேன் 
.
            'உங்களுக்காகப் பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.'  இது நான். 
            'கண்டிப்பாக நான் படிக்கிறேன் மகாதேவன்' என்றார் ரஜினிகாந்த்.
            மேடையில் திருமதி. லதா ரஜினி அவர்களின் நூல் சுவாமிஜியால் வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
            என்னை மேடைக்கு அழைத்த ரஜினி தம்பதியினர்.  வெள்ளி விளக்கை பரிசளித்தனர்.
            அந்த வெளிச்சம்... இன்றுவரை என் வாழ்வில் பரவியுள்ளது.  ஒரு தீபம்தானே ஆயிரம் தீபங்களை ஏற்றி வைக்கும்!
                ரஜினியின் வாக்கு நாலே மாதத்தில் பலித்தது.  தூய சவேரியார் கல்லூரியில் எம்.பில் முடித்த அடுத்த நாள் ஜீலை 10,
1998ஆம் ஆண்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தாளாளர்
அல்ஹாஜ்.
த. இ. செ. பத்ஹுர் ரப்பானி சாகிப் அவர்களின் அன்புள்ளத்தில் கல்லூரி ஆட்சிக்குழு 23 வயதில் என்னை அக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராய் பணியமர்த்தியது.
            திரு. ரஜினி சொல்லி நாலே மாதத்தில் அந்த அதிசயம் நடந்தது. அதனால் தானே திரு. ரஜினிகாந்தின் வாக்கிற்கு அவ்வளவு ஈர்ப்பும்
                ரஜினி தீபமல்ல...
                மகா நட்சத்திரம்.





No comments:

Post a Comment